search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற கூட்டத்தொடர்"

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற வியூகக் குழு கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர்  சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஆதார விலைக்கு தனிச்சட்டம், கொரோனா இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    மழைக்கால கூட்டத்தொடரைப் போன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதிவரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக, 28ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. அதேபோல் குளிர்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

    குறிப்பாக, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மீதே அனைவரின் பார்வையும் இருக்கும். இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். இந்த வார இறுதியில், மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடத்த அமைச்சரவை குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டன. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டன. 
     
    இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடரை நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 20 அமர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் செயல்படும்போது, உறுப்பினர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ஜிகேவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #gkvasan #parliamentarymonsoonsession

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இன்று தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான முறையில் தொடர்ந்து நடைபெற்று மக்கள் நலன் காக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வர வேண்டும்.

    இந்தக் கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை தடையில்லாமல் தொடர வேண்டும். மேலும் நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் இரு அவைகளிலும் ஆரோக்கியமான வாக்குவாதத்திற்கு உட்பட்டு அவையானது சுமூகமாக நடைபெற வேண்டும்.

    அதே நேரத்தில் அவையில் தேவையில்லாமல் கூச்சல், குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆக்கப்பூர்வமான முறையில் விவாதம் நடத்துவதற்கான சூழலுக்கு மத்திய பா.ஜ.க. உறுப்பினர்களும், எதிர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம் கொடுத்தால் தான் நாட்டு மக்களுக்கும் நல்லது; நாட்டின் வளர்ச்சிக்கும் உகந்தது.

    குறிப்பாக மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக திட்டங்களை அறிவித்து, நிலுவையில் உள்ள மக்கள் விரும்பும் மசோதாக்களை மட்டும் நிறைவேற்றவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவும் முன்வர வேண்டும். ஏற்கனவே ரயில்வேத்துறை உட்பட பல துறைகளுக்கு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை தொடர்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கவும், கச்சா எண்ணெய் விலையை கட்டுப் படுத்துவதற்கும், வங்கி மோசடிகளை தவிர்ப்பதற்கும், முதலாளிகளிடம் இருந்து வராக்கடன்களை வசூல் செய்வதற்கும், ஊழல், லஞ்சம், சுரண்டல் ஆகியவை நாட்டில் எந்த மாநிலத்திலும் நடைபெறாமல் இருப்பதற்கும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும், மீனவர்கள் பிரச் சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும், பாலியல் பலாத்காரத்துக்கு தூக்குதண்டனை கொடுப்பதற்கும், பெண் உரிமை, பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிப்பதற்கும், சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும், ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

    தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக் கக்கூடாது என்பதற்கும், வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக சேமிக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்கும், மதவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சாதி, மத, பேதமற்ற சமதர்ம சமுதாயத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், நாட்டின் எல்லைப்புற பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதற்கும், மக்கள் ஏற்கமுன்வராத, விரும்பாத திட்டங்களை முடக்குவதற்கும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும், நிவாரணத் தொகையையும் கொடுப்பதற்கும் முக்கிய முடிவுகளை எடுத்து அதற்குண்டான அறிவிப்புகளை நாடாளுமன்றம் நடைபெறுகின்ற நாட்களிலே அறிவித்து அவைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது மத்திய பா.ஜ.க. அரசின் கடமை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #gkvasan #parliamentarymonsoonsession

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இடையூறுகள் இன்றி நடத்த ஒத்துழைக்குமாறு இன்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் துணை ஜனாதிபதி சந்தித்து வலியுறுத்தினார்.
    புதுடெல்லி:

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.

    இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.


    இதேபோல், துணை ஜனாதிபதியும் பாராளுமன்ற மேல்சபை சபாநாயகருமான வெங்கய்யா நாயுடு, டெல்லியில் இன்று மாலை அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ராஜா மற்றும் இதர எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இடையூறுகள் இன்றி நடத்த ஒத்துழைக்குமாறு அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் துணை ஜனாதிபதி வலியுறுத்தினார். #VenkaiahNaidu #allpartymeeting #ParliamentMonsoonSession
    பாராளுமன்ற செயல்பாடுகள் கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினரை மந்திரி விஜய் கோயல் சந்தித்து வருகிறார். #monsoonsession #govtreachesopposition #Parliamentmonsoonsession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது.

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.

    இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினரை பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி விஜய் கோயல் தற்போது சந்தித்து வருகிறார்.

    சமாஜ்வாதி கட்சி பாராளுமன்ற தலைவர் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி பாராளுமன்ற தலைவர் சத்திஷ் சந்திரா மிஸ்ரா, சிவசேனா பாராளுமன்ற தலைவர் சஞ்சய் ரவுத், இந்ஹ்டிய கன்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா மற்றும் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளையும் சந்தித்த விஜய் கோயல், எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை இடையூறுகள் ஏதுமின்றி நல்லமுறையில் செயல்பட ஒத்துழைக்குமாறு கேட்டுகொண்டார்.

    பாராளுமன்றத்தின் பணிகள் உரியமுறையில் நிறைவேற்றப்பட வேண்டியது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தேசிய கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்த விஜய் கோயல், பாராளுமன்றத்தை சுமுகமாக நடத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை மத்திய அரசின் சார்பில் அனைத்து கட்சி கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #monsoonsession #govtreachesopposition #Parliamentmonsoonsession
    ×